/* */

ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் காலி பணியிடங்கள்..!

ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர் நலத்துறை  கீழ் இயங்கும் பள்ளிகளில் காலி பணியிடங்கள்..!
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கோப்பு படம்)

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலி பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு,

ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று , காலி பணியிடங்களை நிரப்ப சிறிது காலம் ஆக கூடும் என்பதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொது தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி அவர்களை பொது தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும்

காலி பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுனர்களை தேர்வு செய்து நிரந்தர பணியாளர்கள் நிரப்பும் வரை மாற்று ஏற்பாட்டாக செய்ய வேண்டியுள்ள நிலையில் தற்காலிகமாக காலி பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்த ஆணை வரப்பெற்றுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 15,000 இடைநிலை ஆசிரியருக்கு ரூபாய் 12,000 மாத தொகுப்பு ஊதியத்தில் கீழ்காணும் வழி காட்டு நடைமுறைகளை பின்பற்றி நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.

வழிகாட்டும் நெறிமுறைகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பிட வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு மூலம் இருப்பிடம் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த. பணி நாடுனர் இடைநிலை ஆசிரியர் நிலையில் இருப்பின், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமாக விண்ணப்பங்கள் நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இந்த மாதம் 29.12.23 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Dec 2023 7:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  3. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  9. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?