/* */

மழைக்காலங்களில் ஷூக்களை பராமரிப்பது எப்படி என பார்க்கலாமா?

மழைக்காலங்களில் ஷூக்களை பராமரிப்பது எப்படி என பார்க்கலாம்.

HIGHLIGHTS

மழைக்காலங்களில் ஷூக்களை பராமரிப்பது எப்படி என பார்க்கலாமா?
X

மழைக்காலங்களில் ஷூக்களை அணிந்து கொண்டு செல்லும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மழைக்காலங்களில் ஷூக்களை பராமரிப்பது எப்படி என்பது பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

மழைக்காலங்களில் வெளியில் செல்லும்போது தண்ணீர், சகதி ஆகியவை காலணிகளில் படுவதால் அவை விரைவாக சேதம் அடையும். குறிப்பாக ஷூக்கள் மழையில் நனைந்தால் அவற்றை மீண்டும் பயன்படுத்துவது சிரமமாகும்.இதை தடுக்க மழைக்காலத்தில் நாம் அணியும் காலணிகளை கவனமுடன் கையாள வேண்டும். அதற்கான சில வழிமுறைகளை இங்கே காண்போம்.


மழை பெய்யும் நாட்களில் எல்லா இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் .காற்றில் இருக்கும் ஈரப்பதமும் காலணிகளை சேதம் அடைய செய்யும்.இதனால் பூஞ்சை தொற்று ஏற்பட்டு காலணிகளின் மேற்பரப்பில் சாம்பல் மற்றும் கருப்பு நிற புள்ளிகள் தோன்றும். எனவே காலணிகளை முடிந்தவரை உலர்வான இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.காகிதங்கள் அல்லது டிஷ்யூ தாளை கொண்டு காலணிகளை பொதிந்து வைக்கலாம்.

சாலையில் தேங்கும் மழை நீரில் இருக்கும் மண்ணும் சகதியும் ஷூக்களை எளிதில் அசுத்தமாக்கும். இது போன்ற நேரங்களில் அவற்றை பற்பசை கொண்டு எளிதில் சுத்தம் செய்யலாம். வெள்ளை நிற பற்பசையை ஷூவில் உள்ள அழுக்கான இடத்தில் பூசி டூத் பிரஸ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு அந்த இடத்தை ஈரமான துணி அல்லது டிஷ்யூ தாள் மூலம் துடைத்து சுத்தம் செய்யலாம் ஷூவை சுத்தம் செய்ய பலரும் அதிக அளவு தண்ணீரை செலவழிப்பார்கள். ஆனால் இது அனைத்து வகையான ஷூவுக்கும் பொருந்தாது.

லெதர் மற்றும் மெல்லிய தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷூக்களை அதிகமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும் போது அவை எளிதில் சேதம் அடையும். சிறிதளவு தண்ணீரில் சோப்பை கலந்து அதில் துணியை நனைத்து அதன் மூலம் ஷூக்களை சுத்தம் செய்யலாம். லெதர் ஷூக்களின் வெளிப்பகுதி மட்டுமல்லாமல் அவற்றின் உள்பகுதியையும் முழுவதுமாக உலர வைக்க வேண்டும். உள்பகுதியில் ஈரப்பதம் இருந்தால் அந்த ஷூக்களை அணியும்போது பாதங்களில் கிருமி தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது இதுதான் ஏற்படும் பாக்டீரியா பெருக்கமும் ஈரப்பதத்தோடு சேர்ந்து ஷூக்களில் துர்நாற்றம் வீசச் செய்யும் பூக்களின் உள்பகுதியில் டிஷ்யூ தாளை பொதிந்து வைத்தால் அவை எளிதாக ஈரத்தை உறிஞ்சிகொள்ளும்.

அதன் பிறகு ஷூக்களின் உள்ளே சிறிது டால்கம் பவுடரை தூவி வைக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இவ்வாறு செய்யலாம். தினமும் ஷூவுக்கு பாலீஸ் போடலாம். ஷூக்களில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் உலர்ந்த பழைய பிரஸ் கொண்டு அதை முழுவதும் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து பகுதியையும் சுத்தம் செய்வது முக்கியமானது.

அதன் பிறகு நேரடி வெயிலிலோ அல்லது மின்விசை காற்றிலோ ஷூவை உலர வைக்க வேண்டும். மழைக்காலத்தில் லெதர் கேன்வாஸ் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட சொற்களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கலாம். ரப்பர் அல்லது பிவிசி பொருட்களால் தயாரிக்கப்பட்ட பிலிப் பிளாப்புகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் காலணிகளையும் பயன்படுத்தலாம் எனில் இவற்றை எளிதாக உலர வைக்க முடியும். மழைக்காலத்தில் ஹீல்ஸ் ஷூ அணிவதை தவிர்க்க வேண்டும் தட்டையான கீழ் பகுதி கொண்ட காலணிகளை அணிவது நல்லது.

Updated On: 19 April 2024 2:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?