/* */

மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு

மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோரை வழங்கினார்.

HIGHLIGHTS

மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோரை வழங்கினார்.

சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய கழகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர் பந்தலை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ‌கோவிந்தராசன் திறந்து வைத்தார்.

அப்போது பொதுமக்களுக்கு வெள்ளரிகாய்,இளநீர்,மாம்பழம், தர்பூசணி,நீர்,மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர் மேலும் பேருந்தில் கடும் வெயிலில் பயணித்தவர்களுக்கு இந்த பொருட்களை பேருந்திலையே சென்று வழங்கினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோன்று பொன்னேரி பேரூராட்சியில் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மற்றும் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையிலும் திருப்பாலைவனம் மற்றும் மெதூரில் கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூர் கழகச் செயலாளர் தமிழ் உதயன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன்,பொன்னேரி டாக்டர்.தீபன்,ராமலிங்கம்,வாசுதேவன்,மெதூர் சிலம்பரசன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 2 May 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  3. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  6. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  7. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  8. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா