/* */

‘மக்களின் பேரார்வம்,எழுச்சி மாற்றத்தை தரும்’ சீமான் நம்பிக்கை

‘மக்களின் பேரார்வம்,எழுச்சி மாற்றத்தை தரும்’ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

‘மக்களின் பேரார்வம்,எழுச்சி மாற்றத்தை தரும்’ சீமான் நம்பிக்கை
X
சீமான்.

மக்கள் பேரார்வத்தோடு அதிகாலையில் இருந்தே வாக்கு செலுத்துவதை பார்க்கும்போது உறுதியாக பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழத்தில் நான்கு முனை போட்டி உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்றைய தினம் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்பட 13 வகையான ஆவணங்களை காண்பித்து பொதுமக்கள் வாக்களிக்கலாம். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி கயல்விழியுடன் வந்து ஓட்டளித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் பேரார்வத்தோடு வந்து அதிகாலையில் இருந்து வாக்கு செலுத்துவதை பார்க்கும்போது உறுதியாக பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கை வருகிறது. காலையில் இருந்து தன்னெழுச்சியாக பெரும் கூட்டமாக மக்கள் வாக்கு செலுத்துகிறார்கள். உறுதியாக மாறுதல் வரும் என நம்புகிறேன்

என் அன்பு மக்களே அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். எல்லோரும் வந்து வாக்கு செலுத்த வேண்டும். வாக்கு செலுத்துவது நமது கடமை என்று உணர வேண்டும். நாம் வாக்கு செலுத்துவதால் என்ன ஆகிறப்போகிறது? வாக்கு செலுத்தாவிட்டால் என்ன ஆகப்போகிறது? என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். ஏனென்றால் நாம் வாழும் நாட்டுக்கு செய்ய வேண்டிய ஜனநாயக கடமை இதுதான். அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்கி உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 ஆண்கள், 20 பெண்கள் என ஆண்-பெண்களுக்கு சமமாக போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார். கடந்த 2019 தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.89 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் யாரும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றியை எட்டிப்பிடிக்கும் முனைப்பில் 40 தொகுதிகளிலும் தனியாக களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 April 2024 9:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது