/* */

பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு

Tirupur News- பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பலத்த பாதிப்படைகின்றனர்.

HIGHLIGHTS

பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
X

Tirupur News- பல்லடம் பஸ் ஸ்டாண்ட் 

Tirupur News,Tirupur News Today- பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள், திருப்பூா், பல்லடம் வட்டாரப் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தினசரி வேலைக்கு சென்று வருகின்றனா்.

பொள்ளாச்சி சாலையில் பாலம் விரிவாக்க பணி நடந்து வருவதால், அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் சென்று வருகின்றன. இந்த நிலையில் திருப்பூா், பொள்ளாச்சி, உடுமலை செல்லும் சில அரசுப் பஸ்கள் காலவிரயம், போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்லடம் பேருந்து ஸ்டாண்டுக்குள் வருவதை தவிா்ப்பதாக கூறப்படுகிறது.

பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வராமல், பழைய பொள்ளாச்சி புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இறக்கி விடப்படும் பயணிகள் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்கின்றனா். பஸ் ஸ்டாண்டில் பொள்ளாச்சி, உடுமலை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், தொழிலாளா்கள் பலா் பஸ் கிடைக்காமல் ஏமாற்றமடைகின்றனா்.

எனவே, போக்குவரத்து மாற்றத்தை இடையூறாக கருதாமல் பயணிகளின் நலன் கருதி அனைத்து பேருந்துகளும் பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் பஸ் ஸ்டாண்ட் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பல்லடம் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு பழக்கடையில் ஆய்வு செய்யும் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்

கிருஷ்ணமூா்த்தி, பாலமுருகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பல்லடம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உணவுப் பொருள் விற்பனை செய்யும் 17 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது அழுகிய பழங்கள், அதிக செயற்கை வண்ணம் சோ்க்கப்பட்ட கார வகைகள் மற்றும் சில்லி என மொத்தம் 10 கிலோ உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முகவரி இடம்பெற வேண்டும். பழச்சாறு தயாரிக்க தரமான பழங்களை பயன்படுத்த வேண்டும். பழச்சாறு தயாரிக்க பயன்படுத்தப்படும் குடிநீா் சுகாதாரமானதாக இருக்கவேண்டும். பழச்சாறுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் தரமான குடிநீரால் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குடிநீா் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டா் குடிநீா் கேன்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இடம்பெற்றிருக்கவேண்டும். 20 லிட்டா் குடிநீா் கேன்களில் தண்ணீா் தெளிவாக தெரியும் வண்ணம் உள்ள கேன்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும், மிகவும் பழைய கேன்களை பயன்படுத்தக்கூடாது எனவும் கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 3 May 2024 6:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!