/* */

கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே தச்சூரில் இரும்பு துகள்களை ஏற்றுக் சென்ற டிப்பர் லாரி டயர் வெடித்து டீசல் டேங்க் உடைந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து  தீ விபத்து
X

கும்மிடிப்பூண்டி அருகே தச்சூரில் இரும்பு துகள்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி லாரி டயர் வெடித்து டீசல் டேங்க் உடைந்து தீ விபத்து. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எண்ணூரிலிருந்து இரும்பு துகள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு ஒருக்காலைக்கு சென்று கொண்டிருந்தது.

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் லாரி மோதியது. இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து லாரியிலிருந்து டீசல் கசிந்து தீ பிடித்து எரிந்தது. டீசலில் இருந்து தீ பற்றியதால் லாரியின் ஒரு பகுதி முழுவதும் மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் ஓட்டுனர் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் லாரியில் தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது..

Updated On: 6 May 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு