/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-வது கூட்டுறவு வார விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-வது கூட்டுறவு வார விழா தொடக்கம்
X

கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்த இணைப் பதிவாளர் நடராஜன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 70-ஆவது கூட்டுறவு வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் ஜெயம் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் (பணியாளா் நல அலுவலா்) ராஜேசேகரன், சரக துணைப் பதிவாளா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தும், கூட்டுறவு சங்கக் கொடியை ஏற்றி வைத்தும் பேசினாா்.

அப்போது அவா், ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளா்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்ற பிரதான பொருளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வார விழா நவம்பா் 20-ம் தேதி வரை நடத்தப்படுகிறது என்றாா்.

மேலும் இன்று காலை கடன் சாரா கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அனைவருக்கும் நிதியம் என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் மேளா நடைபெற்று வருகிறது.

நாளை 16-ம் தேதி கூட்டுறவு அமைப்புகளை கணினி மையமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களையும் கணினி மயமாக்குதல், எம் எல் சி திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து விளம்பரப்படுத்துதல் மற்றும் செங்கம் வட்டம் அந்தநூர், செய்யாறு வட்டம் கடம்பை ஆகிய கிராமங்களில் இலவச கால்நடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

வருகிற 17-ம் தேதி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொள்ளும் மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து 18 ம் தேதி அரசு தனியார் கூட்டுறவு பங்களிப்பு என்ற பொருளில் கருத்தரங்கம், 19 ஆம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம், 20 ஆம் தேதி இலவச ரத்ததான முகாம்கள் நடைபெறும் என மண்டல இணை பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை செயலாளர் மீனாட்சி சுந்தரம், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர், கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள், சரக துணை பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2023 6:53 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...