/* */

தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை

தேர்தல் தொடா்பாக எளிதில் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைப்பேசி செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

HIGHLIGHTS

தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
X

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் நடைபெறும் மக்களவைத் தேர்தல் தொடா்பாக எளிதில் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைப்பேசி செயலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளை எளிமையாகக் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் கைப்பேசி செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக சி விஜில் (cVIGIL) எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நடத்தை விதிகள், தேர்தல் செலவு தொடர்பான விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம். இந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் தகவல் அனுப்பியவரின் கைபேசி எண்ணுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இறுதியாக தேர்தல் அதிகாரியால் இறுதி நடவடிக்கை அறிக்கை அனுப்பப்படும். கைபேசி எண் இல்லாமல் வரும் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

‘PWD’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் சம்பந்தப்பட்ட வாக்காளர், தான் ஒருமாற்றுத்திறனாளி என்பதை அதில்உள்ள பிரிவுகள் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வாக்குச்சாவடியில் அவருக்கான வசதிகள் செய்யப்படும். இதுதவிர, வாக்காளர் பதிவு, முகவரி மாற்றம், திருத்தம் அல்லது நீக்கம், வாக்குச்சாவடி அமைவிடம், விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

வேட்பாளர், அரசியல்கட்சிகளுக்கான கைபேசி செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘suvidha-nomination’ என்ற செயலியில், வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபின், அவர்களுடைய பிரமாண பத்திரங்களை பொதுமக்கள் இந்த செயலி மூலம் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட 2 நாட்களில் இந்த விவரங்களை செயலியில் பெற முடியும்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கைப்பேசி செயலிகளை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Updated On: 29 March 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!