/* */

செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு

செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
X

செங்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம் எல் ஏ கிரி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ,மோர் , தர்பூசணி, நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, மற்றும் குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்..

இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் அன்பழகன், நகர துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் ,மாவட்ட மத்திய ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

செய்யாறு

செய்யாறு வட்டத்தில் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றிய திமுக சார்பில் மூன்று இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ராஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் , மோர் , தர்பூசணி , வெள்ளரிப்பிஞ்சு , குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

செய்யாறு பேருந்து நிலையம், வெம்பாக்கம் பயணியர் நிழற்குடை அருகில், அப்துல்லாபுரம் கூட்ரோடு ,தூசி கூட்ரோடு ,ஆகிய வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் எம் எல் ஏ கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2024 12:04 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!