/* */

திருவண்ணாமலை ஒன்றிய குழு கூட்டம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

HIGHLIGHTS

திருவண்ணாமலை ஒன்றிய குழு கூட்டம்
X

திருவண்ணாமலையில் நடைபெற்ற  ஒன்றிய குழு கூட்டம்

திருவண்ணாமலை ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் கலைவாணி கலைமணி தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர் ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் பிரித்விராஜன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை வட்டார ஊராட்சியில், வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள, தகுந்த பணிகளை மேற்கொள்ளவும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளவும் மன்றத்தின் அங்கீகாரத்திற்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணி பேசுகையில்,

ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நடப்பாண்டில் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் சமமான பணிகள் வழங்கப்படும் என பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ஏழுமலை , சுபா, காந்தி, ஜீவா, சசிகலா, ரவிச்சந்திரன், அம்சா, உதவி பொறியாளர்கள் இந்திரா காந்தி, அனுசுயா, அரிகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் அலுவலக மேலாளர் பழனி நன்றி கூறினார். கூட்டத்தில் உலக மகளிர் தினத்தை ஒட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி , அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Updated On: 9 March 2024 8:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...