/* */

கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோடை வெப்பத்தை தணிக்க மேற்கூரையுடன் கூடிய நகரும் தடுப்புகள் மற்றும் கோயில் உள் பிரகாரங்களில் தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
X

 வரிசையில் காத்திருந்த பக்தர்களின் பாதங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க குழாய் மூலம் தண்ணீர் ஊற்றிய கோயில் ஊழியர், பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய மற்றொரு கோவில் ஊழியர்

தமிழகத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் தற்போது கோடை வெயில் 105 டிகிரியைத் தாண்டி சுட்டெரித்து வருகிறது.

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்துக்கு அடுத்தபடியாக ஆந்திரா, தெலங் கானா மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். இதேபோல், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது கணிசமாக உள்ளது. வார விடுமுறை நாட்களில் இயல் பைவிட, பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும்.

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேற்கூரையுடன் கூடிய நகரும் தடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. கோயில் உள் பிரகாரங்களில் தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டுள்ளது.

இதன் மீது, வெப் பத்தை தணிக்க கோயில் ஊழியர்கள் மூலமாக தண்ணீர் ஊற்றப்பட்டது. இதேபோல், வரிசையில் காத்திருந்த பக்தர் களின் பாதங்கள் மீது வெப்பத்தை தணிக்க தண்ணீர் ஊற்றப்பட்டது. பக்தர்களின் தாகத்தை தணிக்க, நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டன. வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு எளிதாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, கை குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், வயதானவர்கள் ,மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தரிசனம் செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் மூலம் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டிற்கு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 30 April 2024 1:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது