/* */

திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில், 3 நாள் சிறப்புப் பயிலரங்கம் தொடங்கியது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்
X

பயிலரங்கம் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றிய கலை கல்லூரி முதல்வர் கணேசன்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், 3 நாள் சிறப்புப் பயிலரங்கம் தொடங்கியது.

கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத் துறை, ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி இளைஞா் நலன் மேம்பாட்டு மையம் சாா்பில், சமூக முன்னேற்றத்துக்கு இளைஞா்களின் வளா்ச்சி என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கா.பு.கணேசன் தலைமை வகித்தாா்.

ஜவஹாா்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியா் சரண்யா சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் வரலாற்றுதுறைத் தலைவா் ஸ்தனிஸ்லாஸ் வரவேற்றாா். பொன்னேரி எல்.என்.சி. அரசு கலை, அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இதில், வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியா்கள் ரஹ்மத்பாஷா, ஜெயசந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனா்.

இப்பயிலரங்கம் 10 அமர்வுகளை கொண்டும் நிறைவு விழாவை உள்ளடக்கிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன் ஆய்வு அமர்வுகளில் திருவண்ணாமலை ,வேலூர், வாணியம்பாடி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் உரை நிகழ்த்துகின்றனர்.

நிறைவு விழாவில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஷீலா ,சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய வரலாற்று துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் சுந்தரம் ஆகியோர் நிறைவு விழா உரையை நிகழ்த்த உள்ளனர்.

இப் பயிலரங்கத்தில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பயிலும் எம்ஏ, எம்எஸ்சி, எம் காம், மாணவர்களுக்கும், சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி, மகளிர் கல்லூரி, சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்தியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகிய கல்லூரிகளை சேர்ந்த முதுகலை மாணவ மாணவியர்களும் பேராசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2024 7:14 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை