/* */

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அலுவலர்களுடன் ஆலோசனை

திருவண்ணாமலை தீபத் திருவிழா வை முன்னிட்டு அலுவலர்களுட னான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அலுவலர்களுடன் ஆலோசனை
X

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் முருகேஷ்  தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, வரும் 26ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். மேலும், கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடங்கமாக மூன்று நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாடு வரும் 14ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளான்று துர்கையம்மன் உற்சவமும், இரண்டாம் நாளன்று பிடாரியம்மன் உற்சவமும், மூன்றாம் நாளன்று விநாயகர் உற்சவமும் நடைபெறும்.எனவே, தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த 3வது கட்ட ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், எஸ்பி கார்த்திகேயன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் ரிஷப், ஊராட்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி, கோட்டாட்சியர் மந்தாகினி,கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, ஆட்சியர் பேசுகையில், தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்,கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள்,தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்தல், சிறப்பு பேருந்துகள் இயக்கம், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிரிவலப் பாதையில் தூய்மை பணி, குடிநீர், அன்னதானம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதையும் ஒரே நேரம் அதிக பேருந்துகள் வெளியே சென்று அடுத்த பேருந்து வர காலதாமதம் ஏற்படும் நிகழ்வுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேருந்து நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அடிப்படை வசதிகளும் உரியவாறு வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் இன்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தும் குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்.

கார் பார்க்கிங் பகுதி மற்றும் தற்காலிக கார் பார்க்கிங் நிலையத்தில் நெரிசல்கள் இல்லாமல் கார்கள் நிறுத்தி வைக்க வேண்டும் .தற்காலிக கார் பார்க்கிங் இடத்தில் அடிப்படை வசதிகள் பக்தர்கள் பயன்படுத்தக்கூடியவாறு தூய்மையாக பராமரிக்க வேண்டும் .

அண்ணாமலையார் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதியை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ராஜகோபுரம் தூய்மை செய்யும் பணி உடனடியாக தொடங்க வேண்டும், கோவில் பகுதி ,மாட வீதிகள், கிரிவலப் பகுதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் நகராட்சி ஆணையாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையாளர்கள், அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2023 8:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...