/* */

செய்யாற்றில் விசிக சார்பில் விழிப்புணா்வுப் பேரணி

Vck Awareness Rally செய்யாற்றில், வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பங்கேற்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைக் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யாற்றில் விசிக சார்பில் விழிப்புணா்வுப் பேரணி
X

விசிக சார்பில் மாநாட்டில் பங்கேற்க வலியுறுத்தி  நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

Vck Awareness Rally

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில், திருச்சியில் நடைபெறவுள்ள வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பங்கேற்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைக் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, விசிக வடக்கு மாவட்டச் செயலா் வெம்பாக்கம் மதியழகன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் செல்வம் பேரணியை தொடங்கி வைத்தாா்.பேரணியானது காந்தி சாலை, அண்ணா சிலை வழியாக சென்று ஆரணி கூட்டுச் சாலைப் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து, பேரணியில் பங்கேற்ற கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.பேரணியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் மின்னல் இனியவன் நகர துணை செயலாளர் அருண் நகர இணை செயலாளர் லோகு உள்ளிட்ட விசிக ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் நற் திரளாக கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

பேரணியின் போது சாலையோர வியாபாரிகள், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் திருச்சி மாநாடு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனா்.

பேரணியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் மின்னல் இனியவன், நகர துணை செயலாளர் அருண், நகர இணை செயலாளர் லோகு, பூபாலன், கோபி , கண்ணன் , பன்னீர்செல்வம், சுதாகர் உள்ளிட்ட விசிக ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் திரளானோர் பங்கேற்று, பதாகைகள் கொடிகள் ஏந்தி பேண்ட் வாத்தியங்கள் முழங்க பேரணியாக சென்று மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.

Updated On: 11 Dec 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!