/* */

ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: உலகப்போர் ஏற்படும் அபாயம்

ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பதால் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: உலகப்போர் ஏற்படும் அபாயம்
X
ஈரான் மீது  இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய காட்சி.

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது. இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இன்று ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வெளியான அப்டேட்கள்: - மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. - ஈராக் மற்றும் தெற்கு சிரியாவில் ஒரே நேரத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். - ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்துகின்றன - ஈரானிய வான்வெளியின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டு உள்ளன.

அமெரிக்காவின் ஆலோசனையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு இடையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது. பாலஸ்தீன போரில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்களுக்கு உதவிய நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது. ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.

ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.

இந்த தாக்குதலுக்குத்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. 200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முதல்நாள் நடந்த அதிபர் - பிரதமர் - ராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான் உயர்மட்ட கூட்டத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பயங்கர பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது என்ன பதிலடி என்று தெரியவில்லை. அதன் ஒரு கட்டமாக இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர்தான் இந்த ஈரான் தாக்குதலுக்கு காரணம். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் விடாமல் தாக்கி வந்தது ஈரான் விரும்பவில்லை. இந்த போர் பாலஸ்தீனத்திற்கு ஈரான் மறைமுகமாக உதவி வந்தது. இப்போது நேரடியாக இது இஸ்ரேல் - ஈரான் போராக மாறி உள்ளது.

Updated On: 18 April 2024 9:30 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு