/* */

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் சந்தித்து பேசினார்.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன்
X

முதல்வர் ஸ்டாலினை சென்னையில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களும், அதிமுக தேமுதிக ஒரு அணியாகவும், பாஜக, பாமக ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் தேர்தலை சந்தித்தன.

தேர்தல் வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக அணி வேட்பாளர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள் என்கிற நிலை இருப்பதால் திமுக தலைவரும், முதல் அமைச்சருமான முக ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

கூட்டணி கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினை கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே சந்தித்து தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்ததற்கும், தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலினை இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்தமைக்காகவும், நமது வேட்பாளர் நவாஸ்கனி அவர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ததோடு, 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி கட்சியினரை அரவணைத்து, வெற்றிக்கு மிகச் சிறப்பாக வியூகம் அமைத்து அயராது உழைத்த முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (25-04-2024) காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனுடன், மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி, மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாணவரணி மாநில செயலாளர் ஷபீக் அகமது, ஊடகவியலாளர் ஷாஹுல் ஹமீது, முகம்மது ரபீக் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்தனர்.

Updated On: 25 April 2024 11:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்