/* */

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவு
X

ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வாக்களித்த அமைச்சர் வேலு.

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகளும், ஆரணி தொகுதியில் 1,760 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 3,482 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் 15 வேட்பாளர்களுக்கும் அதிமானோர் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தொகுதிகளில் 15 வேட்பாளர்களுக்கும் அதிமானோர் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது

வாக்காளர்கள் ஆர்வம்:

இன்று பல வாக்குச்சாவடிகளில் அதிகாலை நேரத்தில், வாக்கப்பதிவு துவங்குவதற்கு முன்பே ஏராளமான ஆண்களும் பெண்களும், வாக்களிப்பதற்காக ஆர்வத்துடன் கியூவின் காத்திருந்தனர்.

முன்னதாக 6.30 மணிக்கு, வாக்குச்சாவடிக்கு வருகை தந்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டது. பின்னர் சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் கியூ வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

முன்னதாக 6.30 மணிக்கு, வாக்குச்சாவடிக்கு வருகை தந்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டது. பின்னர் சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் கியூ வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அமைச்சர் வேலு

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சே.கூடலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்கு சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய் பீம் நகரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மனைவியுடன் வந்து இன்று வாக்களித்தார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி காலை 11 மணி நிலவரப்படி வாக்கு சதவீத விபரங்கள்

திருவண்ணாமலை 26 %, ஜோலார்பேட்டை 25.1 % , திருப்பத்தூர் 24.1.%, செங்கம் 26.6% கலசப்பாக்கம் 25.7 % கீழ்ப்பெண்ணாத்தூர் 25.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆரணி மக்களவைத் தொகுதி

ஆரணி 25.2% , போளூர் 33.4 %, செய்யாறு 26.31 , வந்தவாசி 23.4 , செஞ்சி 25.3 மயிலம். 25.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On: 19 April 2024 6:40 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து